முகப்பு

முப்பது ச‌தவிகித தமிழ் மக்களை உள்ளடக்கிய South Brunswick நகரத்தில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு பிற கலை, கலாச்சாரங்களைக் கற்க வாய்ப்பிருக்க, இவை அனைத்தையும் விட மிக முக்கியமான நம் தமிழ் மொழியை பயில்விக்க முறையான பள்ளி இல்லாதது ஒரு குறையாக இருந்தது. இந்தக் குறையைத் தகர்த்தெறியும் வகையில், 2014-ல் பிறந்ததே இந்த “குமாரசாமி தமிழ்ப் பள்ளி”.


ஒரு சராசரி தமிழ் பெற்றோரின் நோக்கமான, தம் குழந்தைகளூக்குத் தமிழில் எழுத, படிக்க, மிக முக்கியமாக பேசக் கற்று தருவதே இந்தப் பள்ளியின் நோக்கம். நமது மொழி என்பது நமதுஅடையாளம், அதை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதே எங்கள் நோக்கம். இந்த நோக்கம் நாளுக்கு நாள் வளர்வதற்கு முக்கிய காரணம், எங்கள் பள்ளியில் இணைந்த குழந்தைகள்,பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களுமே ஆகும்.

திறமைமிக்க, ஆர்வமுள்ள ஆசிரியர்கள் ஆதரவுடன், SouthBrunswick CrossRoads North Middle school ல் , சனிக்கிழமை தோறும் மாலை 3 முதல் 5 வரை பள்ளி நடைபெற்று வருகிறது. இந்த தமிழ்ப் பள்ளி அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம் (American Tamil Academy) கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.

இந்தப் பள்ளியின் மூலம், நம் குழந்தைகளூக்கு நமது தாய் நாட்டிற்கும், தாய் மொழிக்கும், தமிழ்கலாச்சாரத்திற்கும் உள்ள இடைவெளியை குறைத்து, இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ் மகத்துவத்தின் ஒரு சிறு துளியையாவது நமது குழந்தைகளூக்கு சுவைக்க கற்றுக் கொடுப்போம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!