



2024 - 2025 கல்வியாண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது

அன்னைத் தமிழ் அடுத்த தலைமுறைக்கு
முப்பது சதவிகித தமிழ் மக்களை உள்ளடக்கிய South Brunswick நகரத்தில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு பிற கலை, கலாச்சாரங்களைக் கற்க வாய்ப்பிருக்க, இவை அனைத்தையும் விட மிக முக்கியமான நம் தமிழ் மொழியை பயில்விக்க முறையான பள்ளி இல்லாதது ஒரு குறையாக இருந்தது. இந்தக் குறையைத் தகர்த்தெறியும் வகையில், 2014-ல் பிறந்ததே இந்த “குமாரசாமி தமிழ்ப் பள்ளி”.
ஒரு சராசரி தமிழ் பெற்றோரின் நோக்கமான, தம் குழந்தைகளூக்குத் தமிழில் எழுத, படிக்க, மிக முக்கியமாக பேசக் கற்று தருவதே இந்தப் பள்ளியின் நோக்கம். நமது மொழி என்பது நமது அடையாளம், அதை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதே எங்கள் நோக்கம். இந்த நோக்கம் நாளுக்கு நாள் வளர்வதற்கு முக்கிய காரணம், எங்கள் பள்ளியில் இணைந்த குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களுமே ஆகும்.

அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்
தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வரும் குமாரசாமி தமிழ்ப்பள்ளி 2014 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது, அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகத்தின் அங்கீகாரம் பெற்று அவற்றின் நிரூபிக்கப்பட்ட பாடத்திட்டங்களையும், கற்பித்தல் முறையையும் பின்பற்றிவருகிறது.

தனித்துவமிக்க தமிழ்க் கல்வி
தமிழ், வயது, திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் பல்வேறு நிலைகளாகப் பிரிக்கப்படுவார்கள். ஆர்வமுள்ள பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. 2023-24 ம் கல்வி ஆண்டில் 320 மாணவர்களும் 60 ஆசிரியர்களும் உள்ளனர்.

நேரடி வகுப்புகள்
வகுப்புகள் வாரம் இருமுறை தோராயமாக 32 வாரங்கள் ஒவ்வொரு வெள்ளி (நேரிலும்) மற்றும் சனிக் (மெய்நிகர்) கிழமைகளில் நடைபெறுகிறது. நடைபெறும் இடம்: Indian Fields Elementary School, 359 Ridge Rd, Dayton, NJ 08810
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!
திறமைமிக்க, ஆர்வமுள்ள ஆசிரியர்கள் ஆதரவுடன், Indian Fields Elementary School-ல், சனிக்கிழமை தோறும் மாலை 6:30 முதல் 9 வரை பள்ளி நடைபெற்று வருகிறது. இந்த தமிழ்ப் பள்ளி அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம் (American Tamil Academy) கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்தப் பள்ளியின் மூலம், நம் குழந்தைகளூக்கு நமது தாய் நாட்டிற்கும், தாய் மொழிக்கும், தமிழ்கலாச்சாரத்திற்கும் உள்ள இடைவெளியை குறைத்து, இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ் மகத்துவத்தின் ஒரு சிறு துளியையாவது நமது குழந்தைகளூக்கு சுவைக்க கற்றுக் கொடுப்போம்.


செம்மொழியாம் தமிழ் மொழியை, கற்போம் வாருங்கள்
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை கற்பதன் மூலம், வெவ்வேறு கண்ணோட்டங்கள், மதிப்புகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுங்கள், அதிக சகிப்புத்தன்மை மற்றும் பன்முகத்தன்மைக்கான திறன்களை வளருங்கள்.
செம்மொழியான தமிழ் மொழியின் செழுமையில் மூழ்கி, மொழி வரவுகளைப் (Language Credits) பெறுங்கள்.

குமாரசாமி தமிழ்ப்பள்ளி குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்பிக்க, நியூஜெர்சியில் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு.
குமாரசாமி தமிழ்ப் பள்ளி அனைத்துவித இனம், நிறம், தேசிய இனம் சார்ந்த மாணவர்களை அனுமதிக்கின்றது. பள்ளியில் மாணவர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் அல்லது கிடைக்கப்பெறும் அனைத்து உரிமைகள், சலுகைகள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு அனுமதிக்கின்றது. பள்ளியின் கல்விக் கொள்கைகள், சேர்க்கைக் கொள்கைகள், உதவித்தொகை மற்றும் கடன் திட்டங்கள் மற்றும் தடகள மற்றும் பிற பள்ளி நிர்வாகத் திட்டங்கள் ஆகியவற்றில் நிர்வாகத்தில் இனம், நிறம், தேசிய இனம் ஆகியவற்றின் அடிப்படையில் இது பாகுபாடு காட்டாது.
© Copyright 2024, Kumarasamy Tamil School. All Rights Reserved.