மழலை
வயது வரம்பு:
நான்கு முதல் ஐந்து வயது வரை.
தகுதி:
அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை.
நோக்கம்:
இந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.
மொழித்திறன்:
உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.
ஒன்று முதல் பத்து வரை கூறுதல்.
காய்கள், பழங்கள், தாவரங்கள் பெயர்களை அறிதல்.
விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல்.
நிறங்கள், சுவைகள், திசைகள், பருவ காலங்கள் மற்றும் வடிவங்கள் பெயர்களை அறிதல்.
எளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி.
குழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல்.
வாக்கியங்களைத் தெளிவாக உச்சரித்தல்.
மதிப்பீடு கொள்கை
வருகை மற்றும் வகுப்பு செயல்திறன் : 20 புள்ளிகள் (ஒவ்வொரு வகுப்புக்கு ஒரு புள்ளி)
வீட்டுப்பாடம் முடித்தல் : 15 புள்ளிகள் (ஒவ்வொரு வகுப்புக்கு ஒரு புள்ளி)
ஒலி அமைவு : 15 புள்ளிகள்
முதல் பருவத் தேர்வு : 15 புள்ளிகள்
இரண்டாம் பருவத் தேர்வு : 15 புள்ளிகள்
இறுதித் தேர்வு : 20 புள்ளிகள்
மொத்தம் : 100 புள்ளிகள்