நிலை 2
வயது வரம்பு:
குறைந்த பட்சம் 6 வயது.
தகுதி:
அ த க நிலை 1 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே உயிர், மெய் எழுத்துக்கள் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
நோக்கம்:
தமிழ் எழுத்துக்களில் எ வரிசை உயிர்மெய் எழுத்துகள் வரை பயிற்றுவித்தல்.
பெயர்ச்சொற்கள் மட்டுமன்றி, வினைச்சொற்களையும், அவற்றின் மூலம் உருவான எளிதான சொற்றொடர்களையும் பயிலுதல்.
ஒவ்வொரு பாடத்திலும் திருக்குறள், ஆத்திசூடி, கதைகள், பழமொழிகள் மற்றும் பாடல்கள் கற்றறிதல்.
மொழித்திறன்:
தமிழ் எழுத்துகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியானது நிலை இரண்டிலும், இரண்டாம் பகுதியின் எழுத்துகள் நிலை மூன்றிலும் பயிற்றுவித்தல்.
ட, ப, ம, ய என எழுதுவதற்கு எளிதான எழுத்துகளில் ஆரம்பித்து படிப்படியாக மற்ற எழுத்துகளும் இந்த நிலையில் பயிலுதல்.
உயிரெழுத்துகளைத் தவிர, அ & ஆ வரிசை உயிர்மெய் எழுத்துகள், இ & ஈ வரிசை உயிர்மெய் எழுத்துகள், உ & ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் எ வரிசை உயிர்மெய் எழுத்துகளை அறிதல், எழுதுதல்.
ஒவ்வொரு பாடத்திலும் இந்த எழுத்துகளால் ஆன எளிய பெயர்ச்சொற்கள் படங்களுடனும், வினைச்சொற்களும், அவற்றால் உருவான சிறு சிறு சொற்றொடர்களும் பயிலுதல்.
குறைந்தபட்சம் இருநூற்று ஐம்பது சொற்களையாவது அறிதல், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தல்.
மதிப்பீடு கொள்கை
வருகை மற்றும் வகுப்பு செயல்திறன் : 20 புள்ளிகள் (ஒவ்வொரு வகுப்புக்கு ஒரு புள்ளி)
வீட்டுப்பாடம் முடித்தல் : 15 புள்ளிகள் (ஒவ்வொரு வகுப்புக்கு ஒரு புள்ளி)
ஒலி அமைவு : 15 புள்ளிகள்
முதல் பருவத் தேர்வு : 15 புள்ளிகள்
இரண்டாம் பருவத் தேர்வு : 15 புள்ளிகள்
இறுதித் தேர்வு : 20 புள்ளிகள்
மொத்தம் : 100 புள்ளிகள்