நிர்வாகக்குழு

ஆஷா பொன்னம்பலம்:

எனது சொந்த ஊர் கோயம்புத்தூர், இப்போது வசிப்பது Hillsborough.மென்பொருள் பொறியாளர், என் மகள் இந்த குமாரசாமி தமிழ்ப் பள்ளியில் மாணவியாக உள்ளார். குமாரசாமி தமிழ்ப் பள்ளியில் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் திரு.கல்கி, திரு.அகிலன், எனக்கு மிகவும் பிடித்த நாவல் திரு.கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்". எனக்கு சிறுவயது முதலே தமிழ் ஆர்வம் மிக உண்டு.

 

 

முனைவர் வெ. கபிலன்

தாய் மொழி நமது அடையாளம், அதிலும் தமிழ் மொழி உலகமொழிகளுக்கெல்லாம் முதல் மொழி, அதை நமது குழந்தைகளுக்கெல்லாம் சொல்லிக்கொடுப்பதில் உங்களைப்போல் நானும் பெருமைப்படுகிறேன். ஔவையாருக்கு சாகாவரம் பெற்ற நெல்லிக்கனி கொடுத்த அதியமான் ஆண்ட தருமபுரி மாவட்டத்தில் தம்பிசெட்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்து கபிலர் என்ற புலவரின் பெயரினை கொண்ட நான் உங்களுடன் சேர்ந்து இந்த தமிழ்ப் பள்ளியில் தொண்டாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி.

 

 

ராஜாமணி செங்கோடன்:

எனது சொந்த ஊர் சங்ககிரி அருகில் காஞ்சாம்புதூர் எனும் சிறு கிராமம், கொங்கு பொறியியல் கல்லூரியில் பட்ட படிப்பு மற்றும் Rutgers-ல் முதுநிலை வணிக நிர்வாகம். தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை. தமிழ் கட்டுரைகள் மற்றும் நாவல்கள் படிப்பதில் ஆர்வம். மாரத்தான் ஓடுவது பொழுதுபோக்கு. இரண்டு வருடங்களாக எனது குழந்தைகளுக்கு தனியாக தமிழ் கற்று தர முயற்சித்து, தோழ்வியுற்ற பின்பு, நண்பர்களுடன் இணைந்து இந்த பள்ளியை 2014-ல் தொடங்கினோம். பள்ளி தொடங்கிய முதல் வருடத்திலே, எழுபது குழந்தைகளூக்கு மேல் இந்த பள்ளியில் சேர்ந்து எங்களை வியப்படைய செய்துள்ளார்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பேராதரவும் மாணவர்களின் தமிழ் கற்பதில் இருக்கும் ஆர்வமும் எங்களை மேலும் சிறப்பாக இந்த பள்ளிக்காக பணியாற்ற ஊக்குவிக்கிறது. உங்களுடன் இணைந்து நமது தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதே எங்களது குறிக்கோள் !

 

 

ரவி பெருமாள்சாமி:

எனது சொந்த ஊர் கோயம்புத்தூர். கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை அறிவியல்(இயற்பியல்) படிப்பு, பின், கோபி கலைக்கல்லூரியில் முதுநிலை கணிணிப் பயன்பாட்டில்(MCA) பட்டம். மனைவி, இரு குழந்தைகளுடன் வசிப்பது North Brunswick-ல். சிறுவயதில் கிடைக்கும் புத்தகங்களையெல்லாம் வாசித்த பழக்கம், நாளடைவில், தமிழின் மீது மிகப் பெரிய ஆர்வத்தையும், அபிமானத்தையும் வளர்த்து விட்டது. திருக்குறள், திருமுறைகள், திருப்புகழ் என்று நூற்றாண்டுகள் பல கடந்தும், செறிவும் மதிப்பும் மங்காத நூல்களை படிப்பதிலும், அவற்றைப் பற்றிய உரைகளைக் கேட்பதிலும் மிக ஆர்வம்.

 

 

சக்திவேல் வெள்ளிங்கிரி:

எனது சொந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆலாந்துறை. உலகத்திலேயே இரண்டாவது சுவையான தண்ணீர் (சிறுவாணித் தண்ணீர்) எங்கள் ஊரில் தான் உருவாகிறது என்பதில் பெருமை. குழந்தைகளுடன் தமிழில் பேசும்போது அவர்களுடன் ஒரு இணக்கம் ஏற்படுவதாக உணர்கிறேன். நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை தெரிந்துகொள்ள தாய்மொழி மிகவும் அவசியம் என்று மிகவும் நம்புகிறேன். தமிழ் மொழியை நமது வருங்கால இளைஞர்களுக்கு எடுத்துச்செல்லும் பெரும் முயற்சியில் ஒரு சிறு பங்களி்ப்பதில் மகிழ்ச்சி.