ஆசிரியர்கள்

ஆனந்தா பழனிச்சாமி:

எனது ஊர் மதுரை, இப்போது வசிப்பது கென்டல் பார்க். நியூ யார்க் பங்கு சந்தையில் தொழில்நுட்ப இயக்குநராக வேலை. குழந்தைகளுக்கு கற்பித்தல் மற்றும் அவர்களுக்கு அனைத்து சாத்தியமான வழிகளில் உதவுவதில் மிகவும் ஆர்வம். குழந்தைகளுக்கு தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் கற்று தர குமாரசாமி தமிழ்ப் பள்ளி வழியாக பங்களிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

 

 

முனைவர் அன்பழகன் மாரியப்பன் :

எனது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள சிறிய கிராமம், இப்போது வசிப்பது Dayton, NJ. மருந்தியல் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மேலாளராக பணி. ஒரு இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். நான் குழந்தைகளுடன் அனைத்து நேரமும், வீட்டில் இருந்தாலும் வெளியே இருந்தாலும், தமிழில்தான் பேசுவேன்.

 

 

ஆஷா பொன்னம்பலம்:

எனது சொந்த ஊர் கோயம்புத்தூர், இப்போது வசிப்பது Hillsborough.மென்பொருள் பொறியாளர், என் மகள் இந்த குமாரசாமி தமிழ்ப் பள்ளியில் மாணவியாக உள்ளார். குமாரசாமி தமிழ்ப் பள்ளியில் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் திரு.கல்கி, திரு.அகிலன், எனக்கு மிகவும் பிடித்த நாவல் திரு.கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்". எனக்கு சிறுவயது முதலே தமிழ் ஆர்வம் மிக உண்டு.

 

 

பாலா சத்யமூர்த்தி:

எனது சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம் . பிறந்தது வளர்ந்தது கோவை. அப்பா ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் . இயல்பாகவே தமிழின் மீது மிகுந்த ஆர்வம். பள்ளி பருவம் முதலே கதை மற்றும் கவிதைகளில் ஆர்வம். செம்மொழியாம் தமிழ் மொழியை வருங்கால அமெரிக்க சந்ததிகளிடம் கொண்டு சேர்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்.

 

  

 

இளமுருகு ராஜா:

நான் இளமுருகு ராஜா, தமிழ்நாட்டில் சங்ககிரி அருகில் கொளிஞ்சிக்காட்டூர் எனும் சிறு கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். வானம் பார்த்த பூமியான எங்களின் விவசாய வாழ்வில், என் தந்தை அரும்பாடுபட்டு தமிழாசிரியர் ஆனவர். அவர் பெரிய வாசகர், தொல்காப்பியம் முதல் மு.மேத்தா வரையெனப் புத்தகங்கள் மிகுந்து காணப்படும். அதனாலோ என்னமோ தமிழ்பால் சற்று ஆர்வம் மிகுதி. தமிழாசிரியனாக வட அமெரிக்காவில் இது இரண்டாவது பள்ளி. 10 வருடங்களுக்கு மேலாக என் பதிவில் (blog - http://vivasaayi.blogspot.com ) எழுதிவருகிறேன். மேலும் பல படைப்புகள் பல ஊடகங்களில் வெளியாகியுள்ளன. சில குறும்படங்கள், ஆவணப்படங்கள் இயக்கிய அனுபவமும், ஒளிப்பதிவாளனாக பகுதி நேரத் தொழிலும் செய்து வருகிறேன்.

 

 

ஜெயா செந்தில் :

எனது சொந்த ஊர் காரைக்குடி. நான் கணிதம் மற்றும் கணினி அறிவியலில் பட்டம் பெற்றதும் இங்கு தான். எனக்கு மிகவும் பிடித்த பாடங்கள் தமிழ் மற்றும் கணிதம். நான் தற்சமயம் www.mathwind.com என்னும் இணைய தளத்தை வடிவமைத்து அதை பராமரித்து வருகிறேன்.நானும் எனது குழந்தைகளும் குமாரசாமி தமிழ்ப்பள்ளியில் இணைந்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. எனது தாய் மொழியாம் தமிழை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதில் அளவிலா பெருமை கொள்கிறேன். பியானோ வாசிப்பதும், பழைய தமிழ் இசைப் பாடல்கள் கேட்பதும் எனது பொழுதுபோக்கு ஆகும்.

 

 

கவிதா ராஜாமணி :

எனது சொந்த ஊர் சேலம் அருகில் மல்லசமுத்தரம், பட்டம் பெற்றது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில். TTSI-ல் Technical Account manager ஆக பணியாற்றுகிறேன். கவிதைகள், கட்டுரைகள், தமிழ் இலக்கியங்கள் மற்றும் பாடல்கள் படிப்பதில் ஆர்வம். குழந்தைகளை நம்முடனும், நமது குடும்ப வேர்களுடனும், நமது கலாச்சாரத்துடனும் இணைக்கச் செய்வது நமது மொழி. பெற்றோர்களான நாம், நமது அடையாளத்தை பாதுகாக்க, தமிழ் மொழியை நமது குழந்தைகளுக்கு கற்று தருவது மிக பெரிய கடமை என்று நம்புகிறேன். குமாரசாமி தமிழ்ப் பள்ளியுடன் இணைந்து தமிழில் பயணிப்பதில் பெருமகிழ்ச்சி!

 

 

கிருத்திகா :

நான் பிறந்து வளர்ந்தது தமிழ்நாடு, இப்போது வசிப்பது பிரின்ஸ்டன். நான் ஒரு இல்லத்தரசி.
எனக்கு பிடித்தது

- தமிழ் நாவல்கள் படித்தல்
- தமிழ் இசை கேட்பது
- முறையான வீட்டு சமையல் செய்வது
- எந்த நோய்க்கும் ஆயுர்வேத மருந்துகள் மற்றும் வீட்டு வைத்தியம் பற்றிய தேடல்

 

 

மலர் தீபக்:

விரைவில் சுயவிவரத்தை.

 

 

மகேஷ் லாவண்யா பாஸ்கரன் :

எனது சொந்த ஊர் ஈரோடு , இப்போது வசிப்பது South Brunswick,முதுநிலை வணிக நிர்வாக பட்டதாரி(MBA).இப்போது இல்லத்தரசி. இசை, நடனம் போன்றவற்றில் ஆர்வம். குழந்தைகளுக்கு தமிழ் கற்று தருவதில் மிக்க மகிழ்ச்சி.

 

 

மோகன் ராமன் :

பிறந்தது மதுரை அருகே சிறு கிராமம், வளர்த்தது சென்னை, படித்தது தியாகராசர் கலை கல்லூரி, மதுரை.. பள்ளி, கல்லூரி நாட்களில் பேச்சு போட்டி, நாடகங்களில் நடிப்பது பிடித்ததாலோ என்னவோ அதுவே தொடர்ந்து அமெரிக்காவிலும் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு மேடை நாடகங்களில் நடித்தும், இயக்குணராகவும் உள்ளேன். பட்டிமன்றத்தில் நகைச்சுவையாக பேசியும், நடுவராகவும், குறும்படங்களில் நடித்தும் இருக்கிறேன். நியூ யார்க் லைப் இன்சூரன்ஸ் (NYL) இல் ஏஜென்ட் ஆகா பனி புரிகிறேன். குழந்தைகள் மீதும், தமிழின் மீதும் அதீத அன்பு கொண்டவன். பாலம் கட்ட அணில் உதவியது போல் என்னால் முடிந்ததை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல இப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணிபுரிகிறேன்..

 

 

முத்துக்குமார் சின்னராஜு:

எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம். இப்போது வசிப்பது Dayton. மென்பொருள் பொறியாளரக பணிபுரிகிறேன். எனது குழந்தைகள் இருவரும் குமாரசாமி தமிழ்ப் பள்ளியில் தமிழ் மொழி பயில்கிறார்கள். என் தந்தை தமிழ் புத்தகங்கள் நிறைய வாசிப்பார் , அதனால் எனக்கும் சிறுவயது முதலே தமிழ் மீது மிக்க ஆர்வம் உண்டு. எனக்கும் தமிழ் கதை புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். குமாரசாமி தமிழ்ப் பள்ளியில் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சித் தரக்கூடிய ஒன்று. தமிழுக்காக இந்த சிறு தொண்டு அமெரிக்காவில் செய்வது எனக்கு மற்றட்ட மகிழ்ச்சி . வாழ்க தமிழ்.

 

 

நர்மதா பகுத்தறிவாளன்:

பிறந்த ஊர் சிங்கார சென்னை. தற்பொழுது வசிப்பது North Brunswick. மாநகரில் பிறந்து ஆங்கில வழி கல்வி பயின்றாலும் தமிழில் சிறு வயது முதலே ஆர்வம் கொள்ள காரணம் என் தந்தை தான். அடுத்த தலைமுறை நம் தமிழ் மொழியும் பண்பாடும் தெரிந்து வளர வேண்டும் என்பது என் ஏக்கமாக இருந்தது. குமாரசாமி தமிழ் பள்ளி வாயிலாக தமிழை சிறார்களுக்கு சொல்லி கொடுப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

 

 

நித்யா பிரியா :

எனது சொந்த ஊர் கோயம்புத்தூர், இப்போது வசிப்பது East Windsor. மென்பொருள் பொறியாளர், இப்போது இல்லத்தரசி. குழந்தைகளுக்கு கற்று தருவதில் மிக்க மகிழ்ச்சி.

 

 

 

 

பிரபு சின்னத்தம்பி:

வாசிப்பும் ரசனையும் சரியான ஆசான்களும் வாய்த்ததால் தமிழை சிறிய வயதிலேயே காதலிக்கத் தொடங்கியவன் நான். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவியரங்கம், பட்டி மன்றங்கள் என இருந்த நான் இன்று தமிழை நமது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு சிறு துளியாவது உதவும் முயற்சியில் ஆசிரியனாய் இங்கே.

 

 

பிரியங்கா செங்கோடன்:

பிறந்த ஊர் கோபி. சிறு வயதில் எந்த புத்தகம் கிடைத்தாலும் படிப்பதில் உண்டான ஆர்வம் பின்னாளில் தாய் மொழியின் மேல் பற்றாக வளர்ந்துள்ளது .திருவள்ளுவரை விட பெரிய தத்துவ ஞானியும் திருக்குறளை விடச் சிறந்த புத்தகமும் இவ்வுலகில் இருக்க முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை . கரும்பு தின்ன கூலி போல் இந்த ஆசிரியை பணி செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி!!!!

 

 

செல்வராஜ் சண்முகம்:

நான் பிறந்து வளர்ந்தது சேலம் அருகே உள்ள வெண்ணந்தூர். இப்போது வசிப்பது Dayton. Voya Financial என்ற நிறுவனத்தில் மென்பொருள் மேலாளராக பணிபுரிகிறேன். அன்பான மனைவி சுமதி, முத்தான இரண்டு குழந்தைகள் ஸ்ரீநேஷ் மற்றும் ரித்திகா. இருவரும் குமாரசாமி தமிழ்ப்பள்ளியில்தான் படிக்கிறார்கள். சிறிய வயதில் இருந்தே தமிழ் மீது ஆர்வம் அதிகம். நம் அடையாளமான தமிழை அடுத்த தலைமுறை மறந்துவிடக்கூடாது என்ற எண்ணத்திலும், எனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லித்தரும் ஆர்வத்தினாலும், நம் தமிழ்க்குழந்தைகளுக்கு உதவி செய்ய தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தேன்.

 

 

சுபா செல்லப்பன்:

சுபா எனது பெயர். காரைக்குடியாம் செட்டிநாட்டொரு பகுதியே எனது ஊர். தற்போது நியூ ஜெர்சியில் அமைந்துள்ள காப்பீடு (Insurance) நிறுவனமொன்றில், தகவல் தொழில்நுட்ப திட்ட மேலாளராகப் (IT Project Manager) பணியாற்றுகிறேன். தமிழில் மிகுந்த ஆர்வம் உண்டு எனக்கு. எம் தாய்மொழியாம் தமிழை பிற்தலைமுறைகளுக்கு எடுத்து சென்று எம்மொழியை சிறப்புற்று வைக்க வேண்டும் என்பது என் பெருவிருப்பங்களில் ஒன்று.மேலும், நான் வானொலியொன்றில் வானொலி ஆளுமையாகவும் (Radio Jockey) செயல்படுகிறேன். பட்டிமன்றங்கள், மேடைநிகழ்ச்சிகள் போன்றவிடத்தேப் பங்கேற்று, தமிழ் பேசி மகிழ்வேன். தமிழ்க் கவிதைகள் கட்டுரைகளில் மிக ஆர்வமுண்டு. ஆக்கங்களும் செய்வதுண்டு. இப்பள்ளியில் இணைந்து இளஞ்சிறார்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்

 

 

சுமதி சுதாகர்:
எனது சொந்த ஊர் நாமக்கல், இப்போது வசிப்பது North Brunswick. தமிழ் மொழி மீது ரொம்ப ஆர்வம் உண்டு. சிறு கவிதை எழுதும் பழக்கம் உண்டு. ஆசிரியையாக இந்த முயற்சிக்கு உதவுவதில் மிக்க மகிழ்ச்சி.

 

 

சுந்தரி செல்வகுமார்:

எனது சொந்த ஊர் கோயம்புத்தூர், இப்போது வசிப்பது Chesterfield. Burlington Coat Factory-ல் CPA / மேற்பார்வை கணக்காளர் ஆக பணியாற்றுகிறேன். ஆன்மீகம், இசை, நடனம் போன்றவற்றில் ஆர்வம். நான் தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்ததில் பெருமைபடுகிறேன். அதனால் நான் தமிழ் மொழி மற்றும் நம் கலாச்சாரத்தை நமது குழந்தைகள் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

 

 

வாணி என்கிற கோகிலாவாணி பிள்ளை :

நான் பிறந்து வளர்ந்தது சிங்கப்பூர், இப்போது வசிப்பது South Brunswick. Physical Therapist (இயல் மருத்துவர்) ஆக பணியாற்றுகிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக Monmouth Junction பள்ளியில் Odyssey of the mind-ல் தன்னார்வ பயிற்சியாளர். ஒரு தமிழ் பெண்ணாக இருப்பதில் பெருமையாக கருதுகிறேன். எனது தந்தை பிறந்து வளர்ந்தது தமிழ்நாடு, அவர் 1960-ல் மலேசியா / சிங்கப்பூரில் ஒரு தமிழ் எழுத்தாளர், அம்மா மலேசியாவில் இருந்து இரண்டாவது தலைமுறை தமிழ் பெண். நான் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழ் மொழியில் சிறந்த மாணவியாக சிங்கப்பூர் பிரதமரிடம் விருது பெற்றுள்ளேன். எனது குழந்தைகளுடன் எப்போழுதும் வீட்டில் மற்றும் வெளியில் தமிழில் பேசுவோம்.

 

 

விமல்குமாரி:

எனது சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி அருகில் மணப்பாறை, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் முதுநிலை பொறியியல் படிப்பு. தற்போது ஒரு மூத்த மென்பொருள் பொறியாளர் வேலை. இப்போது வசிப்பது South Brunswick. கடந்த இரண்டு ஆண்டுகளாக Monmouth Junction பள்ளியில் Odyssey of the mind-ல் தன்னார்வ பயிற்சியாளர். அப்பா ஒரு ஓய்வுபெற்ற துணை நீதிபதி, அவருக்கு கலாச்சார மற்றும் தமிழ் மொழி புத்தகங்கள் படித்தல் பேரார்வம். அவரிடம் இருந்து அந்த ஆர்வம் எனக்கும் வந்தது. குழந்தைகளுக்கு கற்று தரவும் அவர்களுடன் இருக்கவும் ரொம்ப பிடிக்கும். குழந்தைகளின் திறமைகளை கண்டு பல முறை வியப்படைந்துள்ளேன். நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழில் பேச விரும்புகிறேன். நம் தாய் மொழிதான் கலாச்சாரத்துடன் நம்மை இணைக்கும் என நம்புகிறேன். ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.