எம்மைப் பற்றி

வாழ்வாங்கு வாழும் முனைவர் குமாரசாமி!

 

“குமாரசாமி தமிழ்ப் பள்ளி” இலாப நோக்கமற்ற முறையில் தன்னார்வலர்களால் காலம்சென்ற முனைவர் குமாரசாமி அவர்களின் பெயரில் நடத்தப்படுகிறது.

அண்ணார் அவர்கள் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்தவர். எவர்க்கும், எப்பொழுதும் இல்லை என்று சொல்லாத, எவர் மனதையும் புண்படுத்தாத, இனிய புன்னகையுடன் கூடிய நற்குணமும் கொண்ட அண்ணார் அவர்கள் தமிழகத்தில் நாமக்கல் அருகில் செல்லப்பம்பட்டியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து கல்வியில் சிறந்து விளங்கினார். கோவை பி.எஸ்.ஜி. யில் இளம்நிலை உயிர்வேதியலும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் உயர் நிலை உயிர்வேதியலும் பயின்றார். பாபா அணுமின் நிலைய ஆராய்ச்சிக்கூடத்தில் சில காலம் பயின்ற பின் ஆஸ்திரேலியாவின் அடிலைடில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் மேல் முனைவராக (Post Doctoral Fellow) அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்லைகக்கழகங்கழுள் ஒன்றான பென்சல்வேனியா பல்கலைக்கழகத்தில்(UPenn) பணிபுரிந்த பின் கென்டக்கியில் உள்ள லூயிவில் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்தார்.

அதற்குப் பின்னர் 28 வருடங்கள் செரிங்பிளவ்/ மெர்க்(Schering Plough/Merck) எனும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஆய்வுப்பணி மட்டுமல்லாது சமுதாயப்பணியும் தமிழ்ச்சேவையும் தொடர்ந்து அயராது செய்துவந்ததார். நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கதலைவராக சிறப்பாக அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டார். தமிழுக்காகவும், தமிழர்க்காகவும் பெரும்பங்காற்றியுள்ளார். அவர்களின் நற்சேவைக்காக, அவரின் நினைவாக இந்த தமிழ்ப் பள்ளிக்கு “குமாரசாமி தமிழ்ப் பள்ளி” என்று பெயர் வைப்பதில் பெருமை கொள்கிறோம்.

குமாரசாமி அவர்களின் படைப்புகள் கீழ்கண்ட வலைப்பதிவில் (blog - http://kollimalai.blogspot.com ) பதிவு செய்யப்பட்டுள்ளது.