செப் 13, 2014 : தமிழ் பள்ளி 2014-15 ஆண்டுக்கான வகுப்புகள் துவக்கம்

குமாரசாமி தமிழ்ப் பள்ளியில் 2014-15 ஆண்டுக்கான வகுப்புகள் செப்டம்பர் 13, 2015 முதல் கிராஸ்ரோட்ஸ் வடக்கு மத்திய பள்ளியில் துவங்கியது. மழலை, நிலை ஒன்று மற்றும் நிலை இரண்டு ஆகிய மூன்று நிலைகளில் எழுபது மாணவர்களுக்கு மேலாக பதிவு செய்துள்னர். பெற்றோர்கள்-ஆசிரியர்கள் கலந்துரையாடலுக்கு பிறகு முதல் வகுப்பு தொடங்கியது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள, பல பெருமைகளை பெற்ற செம்மொழியான தமிழ் மொழியை கற்க ஆர்வதுடன் இந்த பள்ளியில் இணைந்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் வாழ்த்துக்கள்.