மார்ச் 7, 2015 : நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க தமிழ் மொழி போட்டியில் நமது பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

 

நியூ ஜெர்சி மாநிலத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்க, நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் கடந்த மார்ச் 7 ந்தேதி நமது பள்ளி வளாகத்தில் கொஞ்சும் மழலை, பேச்சுப்போட்டி, ஒரு நிமிடப் போட்டி (ஜாம்) வார்த்தை விளையாட்டு (எழுத்துப்பிழை தேனீ) மற்றும் கலந்துரையாடல் (குழு விவாதம்) என பல தமிழ் போட்டிகளை நடத்தினர். இந்த போட்டிகளில் நியூ ஜெர்சியிலுருந்து பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நமது பள்ளியின் சார்பில்

  • தீபன் ஜெகநாதன்
  • கிரிஷ் பாபு
  • ஷாஸ்வாத் மாணிக்கா
  • விக்ரம் ராமானுஜம்

ஆகிய மாணவர்கள் பல போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் பேச்சுப்போட்டியில் "ஒரு திருக்குறளும் அதன் நீதி விளக்கமும் "என்ற தலைப்பில் தீபன் ஜெகநாதனும் ஒரு நிமிடப் போட்டியில் ஷாஸ்வாத் மாணிக்காவும் பரிசு பெற்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட மற்றும் பரிசு பெற்ற மாணவர்களுக்கும் ஆதரவு தந்த பெற்றோர்களுக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த போட்டிகளை ஏற்பாடு செய்திருந்த நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி.

மேலும் இந்த நிகழ்ச்சியில், தமிழ் மொழிக்காக நமது பள்ளியின் மகத்தான பங்களிப்பை பாராட்டி நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் நமது பள்ளியை கெளரித்தது.