ஜனவரி 18, 2015 : நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க பொங்கல் விழா கலை நிகழ்ச்சியில் நமது பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற தை பொங்கல் திருநாள் விழாவில் நமது பள்ளி மாணவர்கள் "பொங்கல் மண் வாசனை" என்ற தலைப்பில் மாட்டு பொங்கலை பற்றி மிக அருமையாக ஒரு சிறு நாடகம் அறங்கேற்றினர். இந்த நாடகம் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் பங்கு பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள். இதனை இயக்கிய நமது பள்ளி ஆசிரியர் சுபா செல்லப்பன் அவர்களுக்கு நன்றி. இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் காணொலியை நமது வலைதளத்தில் ஊடகம் பகுதியில் கண்டுகளியுங்கள். பங்கு பெற்ற மாணவர்கள்:

  • அஜய் அவசி
  • அருண் அவசி
  • அஷ்வத் சங்கர்
  • அவந்திகா பொன்னம்பலம்
  • கிரிஷ் பாபு
  • முகில் பிரபு
  • சஹானா மோகன்குமார்
  • ஷாசங் மாணிக்கா
  • ஷாஸ்வாத் மாணிக்கா
  • வினய் நாராயனன்