அக்டோபர் 5, 2014 : நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க பேச்சு போட்டியில் நமது பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு அக்டோபர் 5-ல் தென் புரூன்ஸ்விக் நூலகத்தில், நியூ ஜெர்சி தமிழ் பள்ளி மாணவர்களுக்காக பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை, தமிழ் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. கீழ் கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு தலைப்பில் மாணவர்களை ஆறு நிமிடங்கள் வரை பேச அழைக்கப்பட்டார்கள்.

  • - ஒரு திருக்குறளும் அதன் நீதி விளக்கமும்....
  • - நான் ஒரு வேளை இந்தியாவில் பிறந்து வளர்ந்திருந்தால்..
  • - எனக்குப் பிடித்த தலைவர்

இந்த போட்டியில், நமது பள்ளியின் சார்பில் கீலுள்ள ஆறு மாணவர்கள் பங்கேற்றனர்,

  • - அனிருத் வசந்த்
  • - அவந்திகா பொன்னம்பலம்
  • - தீபன் ஜெகநாதன்
  • - மேஹா முத்துக்குமார் பூங்கோதை
  • - மைத்ரி சுரேஷ்குமார்
  • - ஷெஸ்வாத் மாணிக்கா

இந்த போட்டியில் பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.

இந்த போட்டியை ஏற்பாடு செய்திருந்த நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி.