ஜூலை 7, 2014 : குமாரசாமி தமிழ்ப் பள்ளி திறப்பு விழா

இனிய நண்பர்களே !

நம் குழந்தைகளின் தமிழ்க் கல்விக்காக, நமது அழகிய தென் புரூன்ஸ்விக் நகரத்தில் இலாப நோக்கமற்ற முறையில் ஒரு தமிழ்ப் பள்ளி அமையவிருக்கிறது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வகுப்புக்கள் செப்டம்பர் 6 முதல் ஆரம்பம். இதன் கீழ் மற்றவிவரங்கள்:

  • 1) இலாப நோக்கமற்ற முறையில் தொண்டர்களால் நடத்தப்படும்.
  • 2) அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம் சார்ந்து அவர்களின் வரவிற்குட்பட்ட முறையில், நிரூபிக்கப்பட்ட வகுப்பறை உபகரணங்களுடன் இயங்கும்.
  • 3) ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை (சுமார் 32 வகுப்புக்கள் ஒவ்வொரு வருடமும்) வகுப்புக்கள் நடக்கும்.
  • 4) வகுப்புக்கள் நடக்கும் இடம்: Crossroads North Middle School (635 Georges Road, South Brunswick, NJ, 08852)
  • 5) குழந்தைகளின் (மாணாக்கர்களின்) தகுதி, வயது, திறமைக்கேற்ப அவர்களின் குழுமம் தீர்மானிக்கப்படும்.
  • 6) திறமை மிக்க, ஆர்வமுள்ள, தொண்டாற்றும் மனபாங்குள்ள பெற்றோர்களால் நிர்வகிக்கப்படும்.
  • 7) கல்விக்கான அடிப்படைத் தேவைகளுக்கான கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும்.

கீழ்க்கண்ட வலைதளத்தில் உங்கள் குழந்தகளை (மாணாக்கர்களை) பதிவு செய்யலாம்.

இந்த தமிழ்ப் பள்ளி முனைவர் குமாரசாமி அவர்களின் பெயரில் நடத்தப்படும்.முனைவர் குமாரசாமி அவர்கள் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்தவர். தமிழுக்காகவும், தமிழர்க்காகவும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அவர்களின் நற்சேவைக்காக இந்த தமிழ்ப் பள்ளிக்கு குமாரசாமி நினைவு தமிழ்ப் பள்ளி என்று பெயர் வைப்பதில் பெருமை கொள்கிரோம்.

பள்ளி ஆரம்ப விழாவில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

தேதி & நேரம்: திங்கள், ஜூலை, 7, 2014; 6:00 PM to 8:00 PM

இடம் : Pioneer Grange, 410 Ridge Road, Dayton, NJ 08810

சிறப்பு விருந்தினர்: தவத்திரு மருதாச்சல அடிகளார், இளைய பட்டம், பேரூர் சாந்தலிங்க மேடம், கோவை, தமிழ் நாடு)

மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்த ஊக்கப்படுத்துகிறோம். நேராகவும் விழாவிற்கு வரலாம்.

உங்கள் நண்பர், உறவினர்க்கு இந்த நற்செய்தியை தெரிவிக்கவும்.